அடுத்த மாதம் சிபிஆர் 150ஆர் பைக்கை அறிமுகப்படுத்தும் ஹோண்டா

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த ஆண்டு ஹீரோ ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்திலிருந்து பிரிந்த பின் நம்பர் ஒன் இடத்தை குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறது.
இதன் பயனாக, கடந்த ஆண்டு இறுதியில் இருசக்கர வாகன விற்பனையில் மூன்றாவது இடத்தில் இருந்த டிவிஎஸ் மோட்டார்சை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை தனதாக்கிக்கொண்டது.
இதைத்தொடர்ந்து, இரண்டாம் இடத்திலுள்ள பஜாஜ் ஆட்டோவின் விற்பனையை விஞ்ச திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் கேடிஎம் டியூக் நேக்டு ஐ ஸ்போர்ட்ஸ் பைக்கை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், கேடிஎம் டியூக் பைக்குக்கு போட்டியாக தனது சிபிஆர் 150 ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஹோண்டா அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
சிபிஆர் வரிசையில் ஏற்கனவே 250 சிசி மோட்டார்சைக்கிளை ரூ.1.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ரூ.1.17 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள கேடிஎம் டியூக் பைக்குக்கு போட்டியாக ரூ.1.15 லட்சம் விலையில் சிபிஆர் 150ஆர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








