புதிய 110 சிசி பட்ஜெட் பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்த ஹோண்டா

Honda Dream Yuga
ரூ.44,642 விலையில் ட்ரீம் யுகா பட்ஜெட் பைக்கை சற்றுமுன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா பைக்குகளுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஹீரோ மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஹோண்டா பெரும் போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

இநத் நிலையில், மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் விதமாக புதிய பட்ஜெட் பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், நகர்ப்புறம் தவிர, கிராமப்புற மார்க்கெட்டிலும் முக்கிய இடத்தை பிடிக்க முடியும் என்று நம்புகிறது.

ட்ரீம் யுகா என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய பைக்கில் 109 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எனவே, தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஷைன் பைக்கை விட அதிக மைலேஜ் கொடுக்கும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

இந்த புதிய பைக்கை தனது நிறுவன விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து பிரபலப்படுத்த போவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 15, 2012, 12:12 [IST]
English summary
Japanese two-wheeler makwer Honda motorcycle company, today launched its second mass segment motorcycle ‘Dream Yuga’ in India priced at Rs 44,642 (ex-showroom Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+