சென்னையில் ஹோண்டா ட்ரீம் யுகா அறிமுகம்: விலை விபரம்

நகர்ப்புற மார்க்கெட் மட்டுமல்லாமல் கிராமப்புற மார்க்கெட்டையும் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது ஹோண்டா. இதற்காகவே, அனைத்து மார்க்கெட்டுகளுக்கும் பொருந்தும் அம்சங்களுடன் ட்ரீம் யுகா வந்துள்ளது. கடந்த மாதமே ட்ரீம் யுகாவுக்கு முன்பணம் பெற்றுக்கொண்டு டீலர்களில் புக்கிங் துவங்கப்பட்டது.
இந்த நிலையில், ட்ரீம் யுகாவை முறைப்படி சென்னையில் அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா. ஸ்போக் வீல், செல்ப் ஸ்டார்ட் கொண்ட மாடல் சென்னையில் ரூ.52,824 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதேபோன்று, அலாய் வீல், செல்ப் ஸ்டார்ட் கொண்ட மாடல் ரூ.56,692 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு விட்டுள்ளது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற விலையில் ட்ரீம் யுகாவை வாங்கிக் கொள்ளலாம்.
ஷைனில் இருக்கும் டிஸ்க் பிரேக்கை கழற்றிவிட்டு, ட்விஸ்ட்டர் எஞ்சினை ட்யூனிங் செய்து இதில் பொருத்தி வந்திருப்பதால் குறைந்த விலை ஷைன் என்று கூறலாம். மேலும், மாஸ் பைக் மார்க்கெட்டில் அதிக மைலேஜை தரும் பைக்குகளி்ல ஒன்றாக ட்ரீம் யுகா இருக்கும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








