ரூ.47.804 விலையில் புதுப்பொலிவுடன் புதிய ஷைன்: ஹோண்டா அறிமுகம்

நம் நாட்டு மாஸ் மார்க்கெட்டில் ஹோண்டா ஷைன் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற பைக்காக மாறியுள்ளது. அதிக மைலேஜ், நல்ல பெர்பார்மென்ஸ் தரும் அருமையான எஞ்சின், கவரும் வடிவமைப்பு மற்றும் கூடுதல் வசதிகள் ஷைனை முன்னிலைப்படுத்த காரணங்களாகின்றன.
இந்த நிலையில், ஷைன் பைக்கை மேலும் மெருகூட்டியுள்ளது ஹோண்டா. புதிய ஷைன் பைக்கில் ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க ஹெட்லைட் வைஸர் மாற்றம் கண்டுள்ளது.
பின்புற இருக்கையின் கீழ் ஸ்கூப்பும் மாற்றம் கண்டுள்ளது. பெட்ரோல் டேங்க்கில் புதிய கிராபிக்ஸ் டிசைன் வரையப்பட்டுள்ளதால், கூடுதல் கவர்ச்சியாக இருக்கிறது.
இதுதவிர, அட்டகாசமான மான்சூன் கிரே மெட்டாலிக் மற்றும் ஃபோர்ஸ் சில்வர் மெட்டாலிக் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் புதிய ஷைன் கிடைக்கும்.
ரூ.47804 ஆரம்ப விலையில் புதிய ஷைன் விற்பனைக்கு கிடைக்கும் என்று ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








