பிரேக் கோளாறு: சிபிஆர் 250ஆர் பைக்குகளை திரும்பபெறும் ஹோண்டா

Honda CBR 250R
முன் சக்கர பிரேக்கில் இருக்கும் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்து தரும் விதமாக இந்தியாவில் 11,500 சிபிஆர் 250ஆர் பைக்குகளை திரும்ப பெறுவதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவின் வெற்றிகரமான பிரிமியம் மாடலாக சிபிஆர் 250ஆர் பைக் திகழ்கிறது. மேலும், இந்தியாவின் 250 சிசி ரக மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டிலும் அதிகம் விற்பனையாகும் பைக் மாடலும் இதுதான். இந்த நிலையில், சிபிஆர் 250ஆர் பைக்கின் ஸ்டான்டர்டு வேரியண்ட் பைக்குகளின் முன் சக்கர பிரேக் சிறப்பாக செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை தயாரிக்கப்பட்ட சிபிஆர் 250ஆர் ஸ்டான்டர்டு வேரியண்ட் பைக்குகளை திரும்ப பெறுவதாக ஹோண்டா அறிவித்துள்ளது. மேலும், திரும்ப பெறும் பைக்குகளில் இருக்கும் பிரச்னையை அங்கீகாரம் பெற்ற டீலர்கள் அல்லது சர்வீஸ் மையங்களில் இலவசமாக சரிசெய்து தரப்படும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், பிராண்ட் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் விதமாகவும் தாமாக முன்வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்த பிரச்னையை சரிசெய்து தருவதற்கு ஒரு மணிநேரம் மட்டுமே ஆகும் என்றும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, November 19, 2012, 15:07 [IST]
English summary
Honda Motorcycle company has voluntarily recalled 11,500 units of CBR 250R standard variant produced between March of 2011 to September 2012 on account of front brake issue.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+