புதிய ஆஃப் ரோடு பைக்கை களமிறக்க ஹோண்டா திட்டம்

சிஆர்எப்250எல் ஆஃப் ரோடு பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

வடிவமைப்பில் ஹீரோ இம்பல்ஸ் பைக்கை நினைவுபடுத்தினாலும் இதில் 250சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 23 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் சிஆர்எப்250எல் பைக்கையே சில மாறுதல்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Honda CFR 250L

இந்த புதிய ஆஃப் ரோடு பைக் அதிக உறுதிவாய்ந்த ட்வின் ட்யூப் ஸ்டீல் சேஸிஸ் கொண்டிருக்கிறது. இந்த பைக்கில் பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க போர்க் ஸ்டெம் மற்றும் மட்கார்டும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 7.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

ஸ்பீடோமீட்டர், எரிபொருள் அளவீட்டு மானி மற்றும், எஞ்சின் ஆர்பிஎம் மீட்டர், கடிகாரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையபெற்ற டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கன்சோலை கொண்டிருக்கிறது. மணல், ஜல்லி, சிறு கற்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க எஞ்சின் கார்டும் இருக்கிறது.

143 கிலோ எடை கொண்ட இந்த பைக்கை இரண்டு பக்கமும் 45 டிகிரி கோணம் வரை திருப்ப முடியும். சிவப்பு மற்றும் வெள்ளை நிற கலவையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட இதன் எஞ்சின் லிட்டருக்கு 44.3 கிமீ மைலேஜ் கொடு்க்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, June 16, 2012, 14:32 [IST]
English summary
Japanese two wheeler maker Honda is planning to increase its bike range in Indian market. This time company is considering to launch new CRF250L in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+