ஹோண்டா ட்ரீம் யுகா பட்ஜெட் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

வடிவமைப்பு:
வடிவமைப்பில் ஷைனை ஒத்திருந்தாலும் சில மாற்றங்களுடன் வந்திருக்கும் ட்ரீம் யுகா பட்ஜெட் பைக்கை வாங்க விரும்புவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். அழகான ஹெட்லைட்,படு ஷார்ப் எட்ஜ் கொண்ட இன்டிகேட்டர்கள், சரியான பொஷிசன் கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள் என முன்பக்கம் ஷைனை நினைவுப்படுத்துகிறது.
இருக்கை அமைப்பு:
ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வசதியாக அமர்ந்து செல்லும் வகையில் தாராள இருக்கை வசதியை கொண்டிருக்கிறது. அதேபோன்று, பின்னால் அமர்பவர்கள் பாதுகாப்பாக அமர்ந்து பயணம் செய்யும் வகையில் ஸ்டைலான கிராப் ரெயில் என்று கூறப்படும் கைப்பிடியை கொண்டிருக்கிறது.
எஞ்சின்:
ட்விஸ்ட்டர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 110 சிசி எஞசினை ட்யூனிங் செய்து ட்ரீம் யுகாவில் பொருத்தியுள்ளது ஹோண்டா. 4 ஸ்ட்ரோக் ஏர்கூல்டு தொழில்நுட்பம் கொண்ட இந்த எஞ்சின் 8.5 பிஎச்பி ஆற்றலையும், 8.91 என்எம் டார்க்கையும் இந்த எஞ்சின் வெளிப்படுத்தும்.
ஹோண்டாவின் இன்டலிஜென்ட் இக்னிஷன் கன்ட்ரோல் சிஸ்டம் கொண்டிருப்பதால், இந்த எஞ்சின் அதிக பிக்கப்பை தரும் அதவேளையில் நிறைவான மைலேஜையும் தரும். இது 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.
விஷேச ஏர்பில்டர்:
ஹோண்டாவின் ட்ரீம் யுகாவில் விஸ்காஸ் ஏர் பில்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஏர் பில்டரை அவ்வப்போது எடுத்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதோடு சிறப்பாக செயல்படும்.
சஸ்பென்ஷன்:
அதிர்வுகளை இலகுவாக எதிர்கொண்டு ஸ்மூத்தான பயணத்தை தரும் வகையில் முன்பக்கம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்பக்கம் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட 5 வே ட்யூப் டைப் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. எடைக்கு தக்கவாறு பின்புற சஸ்பென்ஷனை மாற்றிக் கொள்ளும் வசதி இருப்பதால் ஸ்மூத்தான பயண அனுபவத்தை பெறலாம்.
ட்யூப்லெஸ் டயர்:
நீடித்த ஆயுள் கொண்ட ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பஞ்சரானால் கூட உடனடியாக காற்று இறங்காது என்பதால் நடுவழியில் தவிக்க வேண்டியிருக்காது. மேலும், ட்யூப்லெஸ் பஞ்சர் கிட் இருந்தால் நாமே 10 நிமிடங்களில் பஞ்சர் ஒட்டிவிடலாம்.
பெட்ரோல் டேங்க் கொள்ளவு:
ட்ரீம் யுகாவில் 8 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரகத்தை சேர்ந்த பிற மாடல்களுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான்.
பிரேக்:
ஷைன் பைக்கில் முன்புறம் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கும். ஆனால், ட்ரீம் யுகாவில் இரண்டு சக்கரங்களிலும் சாதாரண டிரம் பிரேக் சிஸ்டமே கொண்டுள்ளது.
மைலேஜ்:
அராய் சோதனைகள் நடத்தி அளித்த சான்றின்படி லிட்டருக்கு 72 கிமீ மைலேஜ் தருவதாக ஹோண்டா தெரிவிக்கிறது.
செல்ப் ஸ்டார்ட்டர், அனலாக் ஸ்பீடோமீட்டர், 2.0ஏஎச் திறன் கொண்ட 12 வோல்ட் பேட்டரி, 12 வோல்ட் ஹெட்லைட் ஆகியவை இதர அம்சங்கள்.மான்சூன் கிரே மெட்டாலிக், ஆல்பா ரெட் மெட்டாலிக், மேப்புள் பிரவுன் மெட்டாலிக், ஃபோர்ஸ் சில்வர் மெட்டாலிக் மற்றும் கருப்பு ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








