ஆண்டுக்கு 6 மில்லியன் கார்கள் விற்பனை: ஹோண்டா வைத்த புது இலக்கு

சர்வதேச அளவில் அதிக பெட்ரோல் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஹோண்டா. இருப்பினும், விற்பனையில் சக நாட்டு நிறுவனங்களுக்கு இணையாக அந்த நிறுவனத்தால் விற்பனை வளர்ச்சியை எட்ட முடியவில்லை.
இந்த நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய தகனோபு கூறியதாவது," அடுத்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு 6 மில்லியன் கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்திருக்கிறோம்.
இது மிகப் பெரிய இலக்குதான் என்றாலும், இதனை எட்டுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 3 மில்லியன் கார்கள் என்ற விற்பனை இலக்கை எட்ட முடிவு செய்திருக்கிறோம்," என்றார்.
இந்தியா, சீனாவிலிருந்து அந்த நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கும் நிலையில், இரு நாடுகளிலும் அந்த நிறுவனத்துக்கு பல தடைக்கற்கள் உள்ளன.
ஹோண்டா வசம் இதுவரை டீசல் மாடல்கள் இல்லாததால் இந்திய மார்க்கெட்டில் தடுமாறி வருகிறது. பிரியோ, ஜாஸ், சிட்டி உள்ளிட்ட கார்களின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. ஆனால், டீசல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டால் ஓரளவு விற்பனை அதிகரிக்கும்.
இதேபோன்று, சீனாவில் ஜப்பானுக்கெதிரான போராட்டங்களால் ஹோண்டா கார் ஆலைகளில் உற்பத்தி முடங்கி கிடக்கிறது. எனவே, ஹோண்டா போட்ட கணக்கு நிற்குமா? 4 ஆண்டுகள் கழித்துதான் பதில் தெரியும்.


Click it and Unblock the Notifications








