சிபிஆர் 150ஆரின் புதிய நேக்டு வெர்ஷன்: ஹோண்டா அறிமுகம்

ஹோண்டாவின் சிபிஆர் வரிசை பைக்குகள் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் நம்பிக்கையையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நம் நாட்டு மார்க்கெட்டில் சிபிஆர் வரிசையில் சிபிஆர் 250ஆர் மற்றும் சிபிஆர் 150ஆர் ஆகிய பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், சிபிஆர் 150ஆர் பைக்கின் 'நேக்டு' வெர்ஷனை இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா மோட்டார் ஷோவில் ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கும் இந்த புதிய பைக்கின் பிரத்யேக படங்கள் மற்றும் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டேஸ்லர் சாயல்

டேஸ்லர் சாயல்

சிபிஆர் வரிசையில் வந்தாலும் குறைந்த விலையை நிர்ணயிக்க வேண்டி பல மாறுதல்களை செய்துள்ளது ஹோண்டா. சிபிஆர் 150ஆருக்கும் இந்த புதிய பைக்குக்கும் ஏராளமான வித்தியாசங்கள். சிபி டேஸ்லர் சாயலை இந்த பைக் ஒத்திருக்கிறது. ஆனால், எஞ்சின் சிபிஆர் 150ஆர் பைக்கின் எஞ்சின்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 17.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறம் லிங்டு சஸ்பென்ஷனையும் கொண்டிருக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

வெள்ளை, கறுப்பு, மூவர்ணம் மற்றும் ஆரஞ்ச் ஆகிய 4 வண்ணங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

யாருக்கு எதிரி?

யாருக்கு எதிரி?

இந்த புதிய பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. நம் நாட்டுக்கு வரும்பட்சத்தில் விலையில் பல்ஸர் 200என்எஸ் பைக்குக்கு நேரடி போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
Japanese bike maker Honda has unveiled its most awaited CB 150R Streetfire in Indonesia at the 2012 Jakarta Motorcycle Show. As per information Honda is planning to launch CB 150R Streetfire in Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X