வரும் மே மாதம் முதல் புதிய 250சிசி பைக்குக்கு புக்கிங் துவங்கும் ஹயோசங்

தற்போது ஜிடி7 குரூஸர் பைக் மற்றும் ஜிடி650ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஜிடி மோட்டார்ஸ். இந்த நிலையில், 250 சிசி ரக பைக்குகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளதால், புதிய 250 சிசி பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது ஜிடி.
ஜிடி250ஆர் என்ற நாமகரணத்துடன் வரும் இந்த புதிய பைக் ரூ.2 லட்சம் விலையி்ல் விற்பனைக்கு கொண்டு வர ஜிடி-கார்வேர் கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த புதிய பைக்குக்கு வரும் மே மாதம் முதல் புக்கிங் துவங்கப்பட உள்ளதாக கார்வேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜிடி250ஆர் பைக்கில் 250 சிசி திறன் கொண்ட 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 28 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த புதிய பைக் பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்து வரும் கவாஸாகி நிஞ்சா 250ஆர் மற்றும் ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்குகளுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








