மார்க்கெட்டில் நுழையும் கொரிய பிராண்டு ஸ்போர்ட்ஸ் பைக்!

Hyosung FT250R
கவாஸாகி நிஞ்சா, ஹோண்டா சிபிஆர் வரிசையில் அடுத்து இந்திய மார்க்கெட்டில் புதிய 250சிசி நாளை மறுதினம் அறிமுகமாகிறது. ஹயோசங் பிராண்டில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் களமிறங்குகிறது.

கொரியாவை சேர்ந்த எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனம் ஹயோசங் பிராண்டில் ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகளை தயாரித்து வருகிறது. ஜிடி650ஆர், ஜிடி650என் மற்றும் எஸ்டி7 ஆகிய மூன்று பைக் மாடல்களை தற்போது விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், கார்வேர் மோட்டார்ஸ் சமீபத்தில் விலகியதையடுத்து, இந்தியாவில் டிஎஸ்கே குழுமத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறது எஸ்டி மோட்டார்ஸ். கூட்டணி அமைத்த கையோடு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தனது ஜிடி250ஆர் பைக்கை நாளை மறுதினம் விற்பனைக்கு கொண்டு வருகிறது எஸ்டி மோட்டார்ஸ்.

இந்திய மார்க்கெட்டில் பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்து வரும் கவாஸாகி நிஞ்சா 250ஆர் மற்றும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்குகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஹயோசங் ஜிடி250ஆர் பைக் களமிறங்குகிறது.

உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய பைக்குக்கு 90 சதவீத பாகங்கள் இங்கேயே பெற இருப்பதால் ரூ.1.5 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் இந்த புதிய பைக் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஹயோசங் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, June 11, 2012, 15:05 [IST]
English summary
The Hyosung GT 250R super bike will finally hit Indian roads on June 13th. The new bike which was expected to be launched in India as early as March this year was delayed due to various reasons, the recent one being Hyosung parting ways with partner Garware.
மேலும்... #hyosung #two wheeler #ஹயோசங்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+