விரைவில் 125சிசி, 150சிசி பைக்குகளை களமிறக்க ஹயோசங் திட்டம்

தென்கொரியாவின் எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனம் புனேயை சேர்ந்த டிஎஸ்கே கூட்டணியுடன் ஹயோசங் பிராண்டில் இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. ஜிடி650ஆர், ஜிடி650என், எஸ்டி7 மற்றும் ஜிடி250ஆர் ஆகிய பைக் மாடல்களை தற்போது விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர் ஆதிக்கத்தில் இருக்கும் 125சிசி மற்றும் 150சிசி மார்க்கெட்டை குறிவைத்து புதிய பைக்குகளை களமிறக்க இந்த கூட்டணி திட்டம் வைத்துள்ளது. மேலும், போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் உள்நாட்டிலேயே ஆலை அமைக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், சவாலான விலையில் பைக்குகளை விற்பனை செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் கணக்கு போட்டுள்ளது. மேலும், ஹீரோ நிறுவனத்தின் மார்க்கெட்டையும் குறிவைத்து எதிர்காலத்தில் பைக்குகளை களமிறக்கும் திட்டமும் அந்த நிறுவனத்திடம் உள்ளது.
கார்வேர் விலகியதையடுத்து டிஎஸ்கே மோட்டார்ஸ் சமீபத்தில் ஹயோசங் பிராண்டு பைக்குகளை விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








