ரூ.2.75 லட்சம் விலையில் ஹயோசங் 250சிசி பைக் அறிமுகம்!

Hyosung GT250R
ரூ.2.75 லட்சம் விலையில் ஹயோசங் ஜிடி 250ஆர் பைக் மும்பையில் நடந்து வரும் விழாவில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஓரிரு நாளில் இவை ஷோரூம்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்வேர் நிறுவனம் பிரிந்ததையடுத்து, ஹயோசங் பிராண்டு பைக்குகளின் இணைந்துள்ள டிஎஸ்கே நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பைக் இது. ஜிடி650ஆர், ஜிடி650என் மற்றும் எஸ்டி7 ஆகிய மூன்று மாடல்கள் தற்போது ஹயோசங் பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் புதிய ஜிடி250ஆர் பைக்கை டிஎஸ்கே அறிமுகம் செய்துள்ளது. மேலும், வரும் செப்டம்பரில் ஜிவி 250 க்ரூஸர் பைக்கையும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா சிபிஆர் 250ஆர் மற்றும் நிஞ்சா 250ஆர் பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கினாலும், விலையை ஒப்பிடும்போது ஜிடி250ஆர் பைக் விலை அதிகம் என்பதால் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், அடுத்த 18 மாதங்களில் ஜிடி250ஆர் பைக்குக்கான உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே பெற டிஎஸ்கே முடிவு செய்துள்ளதால் விலை ரூ.1.5 லட்சம் அளவுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 ஸ்ட்ரோக் ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய பைக் அதிகபட்சம் 28 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும், நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 26.4 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் 33.5 கிமீ மைலேஜையும் ஜிடி250ஆர் கொடுக்கும் என்று டிஎஸ்கே தெரிவித்துள்ளது.

இந்த புதிய பைக் வெள்ளி/சிவப்பு, கருப்பு/சிவப்பு மற்றும் சில்வர்/சிவப்பு ஆகிய மூன்று இரட்டை வண்ண கலவை கொண்ட கலர்களில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 13, 2012, 15:04 [IST]
English summary
South Korean premium bike maker Hyosung and DSK Motowheels has launched their all new 250 cc sports bike, GT250Rin India with a price tag of R 275,000 (ex-showroom Mumbai).
மேலும்... #hyosung #two wheeler #ஹயோசங்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+