விரைவில் புதிய குரூஸர் பைக்குகளை களமிறக்க ஹயோசங் திட்டம்

அடுத்து 250சிசி மற்றும் 650சிசி திறன் கொண்ட புதிய குரூஸர் பைக்குகளை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹயோசங்-டிஎஸ்கே கூட்டணி.

இந்திய மார்க்கெட்டில் பெரும் திட்டத்தை கையில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஹயோசங். கார்வேர் விலகியதால் டிஎஸ்கே நிறுவனத்துடன் சமீபத்தில் கூட்டணி போட்டது.

ஏற்கனவே ஜிடி650என் மற்றும் எஸ்7 குரூஸர் பைக்குகளை விற்பனை செய்து வந்தநிலையில், சமீபத்தில் தனது புதிய ஜிடி 250ஆர் பைக்கையும் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த நிலையில், அடுத்து இரண்டு புதிய குரூஸர் பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹயோசங்-டிஎஸ்கே கூட்டணி. ஜிவி650 மற்றும் ஜிவி250 ஆகிய மாடல்கள்தான் அவை.

இதில், ஜிவி 650 பைக்கில் 647சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 74பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். இதேபோன்று ஜிவி250 பைக்கில் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 29பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

இந்த இரண்டு பைக்குகளும் ஹயோசங் விற்பனையில் முக்கிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக டிஎஸ்கே கருதுகிறது. மேலும், ஹயோசங் பைக்குகளை அசெம்பிளிங் செய்வதற்காக புதிய ஆலையையும் கட்ட இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 27, 2012, 11:14 [IST]
English summary
The Korean motorcycle company Hyosung, who already had launched two models GT650N and Hyosung ST7 here in India, has planned to launched the new Hyosung GV250 and Hyosung GV650 in the sep-2012, sources confirmed.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+