கார் பந்தயத்தை தொடர்ந்து இந்தியாவில் பைக் ரேஸ்: ரசிகர்கள் வரவேற்பு

மேலை நாடுகளில் மட்டுமே கார் மற்றும் பைக் பந்தயங்கள் பிரபலமாக இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் முதன்முறையாக இந்தியாவில் பார்முலா ஒன் எனப்படும் உலகின் முதல்நிலை கார் பந்தயம் வெற்றிகரமாக நடந்தது.
டெல்லி அருகே நொய்டாவில் கட்டப்பட்ட புதிய ரேஸ் டிராக்கில் இந்த பந்தயங்கள் நடந்தன. இதன்மூலம், உலக அளவில் பார்முலா ஒன் கார் பந்தயங்களை நடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது உலக சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெற உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் 9 மற்றும் 10ந் தேதி இந்த போட்டி முதன்முறையாக நடைபெற உள்ளன.
இதற்காக புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் நிர்வாகமும், உலக சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தும் இன்ப்ரண்ட் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்பும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. டுகாட்டி, ஹோண்டா, கவாஸாகி, அப்ரில்லா, சுஸுகி மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய முன்னணி அணிகள் இதில் கலந்து கொள்ள உள்ளன.
இந்தியாவில் உலக சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் பந்தயங்கள் நடைபெற உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் பந்தயத்தை விடவும் மோட்டார்சைக்கிள் பந்தயங்கள் மிகவும் த்ரில்லாக இருக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








