புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஹோண்டா பைக்கின் சாகசங்கள்!

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே வீரதீர சாகச காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. குறிப்பாக, கார்கள்தான் கதாநாயகனின் வலது கரமாக திகழும். அதுவும் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அஸ்டன் மார்ட்டின் கார்கள்தான் ஆஸ்தான வாகனமாக இருக்கும்.

அந்த இடத்தை தற்போது ஹோண்டாவின் சிஆர்எப் மோட்டார்சைக்கிள் பிடித்துள்ளது. ஆம், விரைவில் வெளிவர இருக்கும் ஸ்கைஃபால் என்ற புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள்களின் சாகசங்கள் நிரம்பி வழிய உள்ளது.

Honda Crf 250R

இந்த படத்தின் துவக்கமே ஹோண்டா சிஆர்எப் பைக்கில் ஜேம்ஸ்பாண்ட் சீறிப் பாய்ந்து செல்லும் காட்சிகளுடன் படு அசத்தலாக படமாக்கப்பட்டுள்ளதாம். துருக்கியின் இஸ்தான்புல் மற்றும் அடனா ஆகிய நகரங்களில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

ஸ்கைஃபால் படத்துக்காக மொத்தம் 20 சிஆர்எப் ஆஃப்ரோடு பைக்குகளை ஹோண்டா வழங்கியதாம். இவை அனைத்தும் நிபுணர்களின் உதவியோடு கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட பைக்குகள் தற்போது இங்கிலாந்தின் பீலியூ நகரில் உள்ள மோட்டார் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வரும் டிசம்பர் மாதம் வரை இந்த பைக்குகள் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என தெரிவி்க்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிஆர்எப் 250ஆர் பைக்கில் 249சிசி 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளன. இந்த எஞ்சின் 22பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற இந்த பைக்கை இந்தியாவில் விற்பனை செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 18, 2012, 17:04 [IST]
English summary
We know that Aston Martin is James Bond's official ride. In the upcoming movie - Skyfall, the British spy will also be seen riding a Honda motorcycle apart from the gadget packed Aston Martin.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+