2 புதிய கியர் பாக்ஸ் மாடல்களை அறிமுகப்படுத்தும் கைனெடிக்!

Piaggio Ape
நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் 2 புதிய கியர் பாக்ஸ் மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக கைனெடிக் எஞ்சினியரிங் தெரிவித்துள்ளது. மஹிந்திரா நேவிஸ்டார் டிரக்குகள் மற்றும் அபே 4 வீலர் ஆட்டோக்களுக்காக இந்த புதிய கியர் பாக்ஸ்களை கைனெடிக் எஞ்சினியரிங் வடிவமைத்துள்ளது.

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் கைனெடிக் எஞ்சினியரிங் நிறுவனம் பிரபலமாக விளங்குகிறது. டாடா நானோ காருக்கு கைனெடிக் நிறுவனம்தான் கியர் பாக்ஸை தயாரித்து சப்ளை செய்து வருகிறது.

இதுதவிர, வர்த்தக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான கியர் பாக்ஸ் மற்றும் எஞ்சினுக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்களை பல முன்னணி நிறுவனங்களுக்கு கைனெடிக் சப்ளை செய்து வருகிறது.

இந்த நிலையில், மஹிந்திரா நேவி ஸ்டார் மற்றும் அபே ஆட்டோக்களுக்கான 2 புதிய கியர் பாக்ஸ்களை வடிவமைத்துள்ளது. அதி நவீன தொழில்நுட்த்துடன் இந்த 2 புதிய கியர் பாக்சும் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கைனெடிக் எஞ்சினியரிங் நிறுவனத்தின் தலைவர் சுலஜ்ஜா பிரோடியா மோத்வானி கூறியதாவது:

"மார்க்கெட்டுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில், 2 புதிய கியர் பாக்ஸ் மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த 2 புதிய கியர் பாக்ஸ்களும் 18 மாதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நேவி ஸ்டார் மற்றும் அபே 4 வீலர் ஆட்டோக்களுக்காக இந்த புதிய கியர் பாக்ஸ்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்த 3 மாதங்களில் இந்த புதிய கியர் பாக்ஸ்கள் மார்க்கெட்டில் முறைப்படி அறிமுகம் செய்யப்படும். தவிர, அகமதுநகரில் ரூ.60 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட ஆலையிலிருந்து தற்போது டாடா நானோவுக்கு கியர் பாக்ஸ்களை உற்பத்தி செய்து வருகிறோம்.

ஆனால், நானோ கார் உற்பத்தி ஆலை அமைந்துள்ள சனந்த் நகரிலேயே நானோ காருக்கான கியர் பாக்ஸ் உற்பத்தி ஆலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 21, 2012, 16:29 [IST]
English summary
Auto component manufacturer Kinetic Engineering to launch two new gearboxes for Piaggio Ape four wheeler and Mahindra Navistar trucks.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+