பெங்களூரை கலக்கிய கேடிஎம் டியூக் 200 பைக்குகளின் அணிவகுப்பு

பஜாஜ் ஆட்டோவின் ஐரோப்பிய துணை நிறுவனமான கேடிஎம் அறிமுகப்படுத்திய டியூக் 200 பைக்குக்கு இந்திய மார்க்கெட்டில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்களிலேயே மிக பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக மாறிவிட்டது. திரும்பி பார்க்க வைக்க வைக்கும் அதன் ஸ்டைலும், ஆரஞ்ச், வெள்ளை, கருப்பு வண்ணக் கலவையும் இளம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை பெங்களூர் மற்றும் மைசூரை சேர்ந்த கேடிஎம் டியூக் 200 பைக் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து பைக் அணிவகுப்பை நடத்தினர். பெங்களூர், இந்திரா நகரில் துவங்கிய இந்த பேரணி தேவராயணதுர்கா வரை 90 கிமீ தூரத்துக்கு சென்றது.
காலை 6.30 மணிக்கு இந்த பேரணி துவங்கியது. பெங்களூரிலிருந்து ஒரே நேரத்தில் 58 கேடிஎம் டியூக் பைக்குகள் அணிவகுத்து சென்றது ஆரஞ்ச் வண்ண தட்டாம் பூச்சிகள் சாலையில் பறப்பது போன்று கண்களுக்கு விருந்தாக அமைந்ததுடன், அனைவரையும் உற்சாகமடைய வைப்பதாக இருந்தது.


Click it and Unblock the Notifications








