வெறும் 720 ரூபாயில் கேடிஎம் ட்யூக் பைக்குக்கு பிராண்டட் கவர்!

வெயில், மழை மற்றும் தூசிகளால் பைக்கின் நிறம் மற்றும் பாகங்கள் பாதிக்கப்பட கூடிய நிலை இருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் சிறப்பு பேப்ரிக் பொருட்களை கொண்டு இந்த புதிய கவர் தயாரிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் ட்யூக் பைக்கின் ஆரஞ்ச் வண்ணத்திலேயே இந்த கவரும் உள்ளது.
எளிதாக மடித்து எடுத்துச் செல்லும் வகையில் பை ஒன்றும் கொடுக்கப்படுகிறது. தண்ணீர் தடுப்பு வசதி கொண்ட இந்த புதிய கவர் தூசுகளிலிருந்து மட்டுமில்லாது பறவைகளின் எச்சத்திலிருந்தும் பைக்குக்கு விடுதலை கொடுக்கும்.
அறிமுக சலுகையாக 720 ரூபாய் விலையில் இந்த புதிய பைக் கவர் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே, வாங்குவதற்கோ அல்லது பரிசாக வழங்குவதற்கு திட்டமிடுபவர்கள் உடனடியாக அருகிலுள்ள கேடிஎம் ட்யூக் டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








