செலக்ட் 150 சிசி கியர் ஸ்கூட்டரை மீண்டும் அறிமுகப்படுத்திய எல்எம்எல்
கடந்த 1990களில் இந்திய டூ வீலர் மார்க்கெட்டில் எம்எல்எம் செலக்ட் ஸ்கூட்டர் வெகு பிரபலம். மேலும், எல்எம்எல் ஸ்கூட்டர்கள் பஜாஜ் ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியையும் கொடுத்து வந்தன.
இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா பிராண்டுடன் இணைந்து செலக்ட் ஸ்கூட்டரை எல்எம்எல் நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த நிலையில், ஸ்கூட்டர்களுக்கு பவுசு போனதால், செலக்ட் ஸ்கூட்டர் உற்பத்தியை வெகுவாக குறைத்தது எல்எம்எல்.
மேலும், பியாஜியோ உறவையும் வெட்டிக்கொண்டது. இருப்பினும், ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு அயல்நாட்டு சந்தைகளுக்கு செலக்ட் ஸ்கூட்டரை எல்எம்எல் ஏற்றுமதி செய்து வந்தது. மேலும், டெல்லியில் மட்டும் குறிப்பிட்ட மாடல்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்தது.
இந்த நிலையில், மார்க்கெட்டில் பவர் ஸ்கூட்டர்களுக்கு இருக்கும் கிராக்கியை கருத்தில்க்கொண்டு மீண்டும் செலக்ட் ஸ்கூட்டரின் விற்பனை பல மாநிலங்களில் துவங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் முதல்படியாக, கோவாவில் செலக்ட் கியர் ஸ்கூட்டரை எல்எம்எல் அறிமுகம் செய்துள்ளது. 147.5 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் புதிய செலக்ட் ஸ்கூட்டர் 8.7 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
4 ஸ்பீடு கை கியர் பாக்ஸ் கொண்ட இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 80 கிமீ மைலேஜ் தரும் என்று எல்எம்எல் கூறுகிறது. கோவாவில் ரூ.53,475 எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய செலக்ட் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டருக்கு 30,000 கிமீ அல்லது 3 வாரண்டியும் கொடுக்கிறது எல்எம்எல்.


Click it and Unblock the Notifications









