தமிழகத்தில் புதிய டூயூரோ பவர் ஸ்கூட்டர்: மஹிந்திரா அறிமுகம்

டூயூரோ டிஇசட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பவர் ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டூயூரோ ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது.
ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகளின் வடிவமைப்பு மாறுதல் கண்டுள்ளது. இதேபோன்று, கரடு முரடான சாலைகளிலும் ஸ்மூத்தான ரைடிங் கொடுக்கும் வகையில் புதிய டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.
எரிபொருள் சிக்கனத்தையும், அதிக பிக்கப்பையும் வழங்கும் வகையில் எஞ்சினும் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதேபோன்று, அதிக பேலன்ஸ் வழங்கும் வகையில் சேஸிஸிலும் மாற்றங்களை செய்துள்ளது மஹிந்திரா.
ரூ.45,235 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் தமிழகத்தில் புதிய டூயூரோ டிஇசட் பவர் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








