ரூ.49,410 விலையில் மஹிந்திரா ரோடியோ பவர் ஸ்கூட்டர் அறிமுகம்
சென்னையில் புதிய ரோடியோ ஸ்கூட்டரை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த புதிய ரோடியோ ஸ்கூட்டர் ரூ.49,410 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோடியோ ஆர்இசட் என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய ரோடியோ ஸ்கூட்டரில் 125சிசி திறன் கொண்ட இசட் சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 6 கேவி ஆற்றலை வெளிப்படுத்தும்.

அதிக பிக்கப்பை கொடுக்கும் ஸ்கூட்டர்கள் மைலேஜ் தராது என்ற விதியை நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஸ்கூட்டர் மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அராய் சான்றுபடி இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 59.38 கிமீ மைலேஜ் தருவதாக மஹிந்திரா தெரிவிக்கிறது.
அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால் எந்தவொரு சாலைகளிலும் சிறப்பாக பயணம் செய்ய உதவும். சென்னையில் நடந்த அறிமுக விழாவில் மஹிந்திரா உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு உயரதிகாரி விரேன் போப்லி கூறுகையில்,"நகர்ப்புற இளைய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அத்துனை அம்சங்களுடன் புதிய ரோடியோவை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வந்துள்ள ரோடியோ கையாளுமை, ஸ்டைல், பவர்ஃபுல் எஞ்சின் என அனைத்து விதத்திலும் சிறப்பான தயாரிப்பாக கொடுத்துள்ளோம். இதற்கு அமோக ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








