2013 ஜனவரியில் அறிமுகமாகிறது மஹிந்திரா ஸ்டாலியோ

மஹிந்திரா ஸ்டாலியோ
கியர் பாக்ஸ் பிரச்னை சரிசெய்யப்பட்டிருக்கும் ஸ்டாலியோ பைக்கை வரும் ஜனவரியில் அறிமுகம் செய்ய மஹிந்திரா டூ வீலர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், புதிய பெயரில் இந்த பைக் அறிமுகமாக இருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹி்ந்திரா நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு இரு சக்கர வாகன தயாரிப்பிலும் களமிறங்கியது. 110 சிசி திறன் கொண்ட ஸ்டாலியோ பைக்கை அறிமுகப்படுத்தி இருசக்கர வாகன சந்தையில் அடையாளப்படுத்திக்கொள்ள நினைத்தது.

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக ஸ்டாலியோ பைக்கின் கியர் பாக்சில் பிரச்னை இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்துபுகார்கள் வந்தன. இதுகுறி்த்து ஆய்வு செய்த மஹிந்திரா நிறுவனம் ஸ்டாலியோ பைக்கில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டு கடந்த ஆண்டு இந்த பைக்கின் உற்பத்தியையும் உடனடியாக நிறுத்தியது.

மேலும், ஸ்டாலியோ பைக்கின் கியர் பாக்ஸ் பிரச்னையை சரிசெய்து மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்று மஹிந்திரா அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இத்தாலியை சேர்ந்த பிரபல கியர் பாக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தற்போது ஸ்டாலியோ கியர் பாக்ஸ் பிரச்னை சரிசெய்யப்பட்டுள்ளது.

பிரச்னை சரிசெய்யப்பட்டாலும் உடனடியாக களமிறக்காமல் கடந்த ஓர் ஆண்டாக பலகட்ட சோதனைகளை ஸ்டாலியோவுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சோதனைகளில் ஸ்டாலியோவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதால் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் ஜனவரியில் ஸ்டாலியோவின் பெயரை பேண்டீரோ என மாற்றம் செய்து விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 10, 2012, 12:26 [IST]
English summary
The leading automotive manufacturer Mahindra and Mahindra to re-launch the 110cc Stalio bike by early next year. The company official said, stalio's gear box technical problem was solved and the bike production will start soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+