சீறிப் பாய்ந்து வந்து முதலிடம் பிடித்த மஹிந்திரா ரோடியோ!

நாசிக் நகரில் ஆண்டுதோறும் பருவமழைகால ஸ்கூட்டர் பந்தயம் நடத்தப்படுகிறது. இதில், பல்வேறு முன்னணி தயாரிப்புகளுடன் வீரர்கள் கலந்துகொள்வர். மொத்தம் 170 கிமீ தொலைவு கொண்ட இந்த பந்தய பாதையை போட்டியாளர்கள் கடக்க வேண்டும்.
இந்தாண்டுக்கு போட்டியிலும் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனர். சேறு சகதிகள், பாறைகள் நிறைந்த கரடு முரடான சாலைகள் வழியாக பந்தய பாதையை போட்டியாளர்கள் கடந்து வர வேண்டும். இந்த போட்டியில் மஹிந்திரா ரோடியோ ஸ்கூட்டருடன் கலந்து கொண்ட நாசிக் நகரை சேர்ந்த சமீம் கான் என்பவர் முதலிடம் பிடித்தார்.
ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்செஸ் உள்ளிட்ட ஸ்கூட்டர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டிருந்தாலும் மஹிந்திரா ரோடியோ முதலிடம் பிடித்து அசத்தியது. இதுகுறித்து இந்த போட்டியில் வெற்றி பெற்ற சமீம் கான் கூறுகையில்," கரடு முரடான பாதையில் சிறப்பாக டிரைவிங் செய்து வெற்றி பெற்றுள்ளேன்.
அனைத்து சாலை நிலைகளிலும் மஹிந்திரா ரோடியோ சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தது. இனி நான் கலந்து கொள்ளும் போட்டிகளில் மஹிந்திரா ரோடியோ ஆர்இசட் ஸ்கூட்டரையே பயன்படுத்த உள்ளேன்," என்றார்.


Click it and Unblock the Notifications








