மேம்படுத்திய ரோடியோ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா

ரோடியோ ஸ்கூட்டர்
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ரோடியோ ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா.

125சிசி ரகத்தில் மஹிந்திரா ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மஹிந்திரா ஸ்கூட்டர் விற்பனை நன்றாகவே அதிகரித்துள்ளது. இதனால், உற்சாகமடைந்துள்ள மஹிந்திரா புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

டூரோ ஆர்இசட் ஸ்கூட்டருக்கு அடுத்து தற்போது மேம்படுத்தப்பட்ட ரோடியோ ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. புதிய ரோடியோவில் 7 பேக்லிட் கலர்கள் கொண்ட டிஜிட்டல் ஸ்பீடாமீட்டர், டிஜிட்டல் இக்னிஷன் சிஸ்டம் என கவரும் அம்சங்கள் ஏராளம். புதிய இசட் வரிசை 124.6 சிசி எஞ்சினும் ரோடியோவை திறமையாக செயலாற்ற வைக்கும்.

இந்த எஞ்சின் 8.1 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். பொருட்களை வைப்பதற்கான விசாலமான சீட் பே மற்றும் 12 வோல்ட் மொபைல்சார்ஜர் கன்சோலுடன் வருகிறது புதிய ரோடியோ. ஏராளமான புதுமைகளுடன் வரும் புதிய ரோடியோ ரூ.47,196 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 9, 2012, 16:17 [IST]
English summary
After successfully launching the Duro DZ scooter, auto major Mahindra and Mahindra's two-wheeler arm Mahindra 2-Wheelers is all set bring an updated version of its Rodeo scooter. The facelift Rodeo scooter will be renamed as Rodeo RZ. Rodeo RZ will be powered by 124.6cc, four-stroke, air-cooled engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+