குர்கானில் மோட்டோ குஸ்ஸிக்கு ஷோரூம் திறப்பு: முன்பதிவும் துவங்கியது

Griso
இந்தியாவில் மோட்டோ குஸ்ஸி சூப்பர் பைக் பிராண்டை பியாஜியோ அறிமுகம் செய்துள்ளது. டெல்லி அருகே குர்கானில் திறக்கப்பட்டிருக்கும் புதிய ஷோரூம் வழியாக மோட்டோ குஸ்ஸி பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இத்தாலிய நிறுவனமான பியாஜியோ தனது பிரிமியம் ரக இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அடுத்தடுத்து இறக்கி வருகிறது. முதலில் அப்ரிலியா சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த பியாஜியோ அடுத்து வெஸ்பா ஸ்கூட்டர் பிராண்டை அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், தனது மோட்டோ குஸ்ஸி சூப்பர் பைக் பிராண்டையும் தற்போது அறிமுகம் செய்துள்ளது. புனேவை தொடர்ந்து டெல்லி அருகேயுள்ள குர்கானில் அப்ரிலியா பைக்குகளுக்கு புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஷோரூம் வாயிலாகவே மோட்டோ குஸ்ஸி பிராண்டு சூப்பர் பைக்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், மோட்டோ குஸ்ஸி பிராண்டில் முதலாவதாக வரும் கிரிஸோ 1200 பைக்குக்கு முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் இந்த பைக்கின் டெலிவிரி துவங்கும்.

மோட்டோ குஸ்ஸியின் கிரிஸோ 1200 பைக்கில் 110 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1151சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 27, 2012, 11:29 [IST]
English summary
Italian vehicle manufacturer Piaggio is sharing its Aprilia brand’s showroom space with Moto Guzzi motorcycles, making Northward Motors India’s first Moto Guzzi dealership.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+