சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர் உடனுக்குடன் டெலிவிரி கொடுக்கப்படுகிறதா?

ஹோண்டா ஆக்டிவாவுக்கு நேர் போட்டியை கொடுத்து வரும் மாடல் சுஸுகி நிறுவனத்தின் ஆக்செஸ் 125 ஸ்கூட்டர். நல்ல பெர்ஃபார்மென்ஸ் கொண்டிருப்பதால் ஆக்செஸ் ஸ்கூட்டருக்கு தேவை அதிகரித்து சுஸுகிக்கு சுமை கூடியது. ஆக்செஸ் சுமையை குறைத்துக் கொள்ள மாற்று வழியை கையிலெடுத்தது.

Suzuki Access and Swish
ஆக்செஸ் ஸ்கூட்டருக்கு இணையான புதிய சுவிஷ் 125 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி ஆக்செஸ் சுமையை குறைத்துக் கொள்ள முயற்சித்தது. விலை சற்று அதிகமிருந்தாலும் ஓரளவு பலன் கொடுத்தது சுவிஷ். இந்த நிலையில், ஹோண்டா ஆக்டிவா, டியோ ஆகிய மாடல்களால் சந்தை போட்டியை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது யமஹாவும் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதனையடுத்து, போட்டியை எதிர்கொண்டு வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் விதத்தில் தனது ஸ்கூட்டர்களின் வெயிட்டிங் பீரியடை கணிசமாக குறைக்க உற்பத்தி திறனை வெகுவாக கூட்டியிருக்கிறது சுஸுகி. ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியே காத்திருப்பு காலம்தான். இந்தநிலையில், சுஸுகியின் இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் தற்போது உடனடி டெலிவிரி கிடைப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்கூட்டரை முழு தொகையும் கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கையோடு ஸ்கூட்டர்களை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதாகவும், கடன் திட்டத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

More from DriveSpark

Article Published On: Monday, September 17, 2012, 16:34 [IST]
English summary
The waiting period of India's best selling 125cc scooter, the Suzuki Access will no longer be a concern as Suzuki has increased production. Another 125cc scooter from Suzuki, the Swish 125 will also not have much of a waiting period.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+