லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்: வெஸ்பாவுக்கு பியாஜியோ சர்டிபிகேட்

Vespa Scooter
சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ள வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டர் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் செல்லும் என பியாஜியோ கூறியுள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளர்களில் ஒருவரான பியாஜியோ நிறுவனம் தனது வெஸ்பா ஸ்கூட்டர் பிராண்டை மீண்டும் இந்தியாவி்ல் அறிமுகம் செய்துள்ளது.

முதலாவதாக 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு விட்டுள்ளது பியாஜியோ. லைப்ஸ்டைல் ஸ்கூட்டராக வெஸ்பாவை நிலை நிறுத்தப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டர் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் செல்லும் என பியாஜியோ தெரிவித்துள்ளது. இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் ஹோண்டா மற்றும் சுஸுகி நிறுவனங்கள் தங்களது ஸ்கூட்டர் மாடல்கள் லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் செல்வதாக கூறி வரும் நிலையில், பியாஜியோவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரை பிரிமியம் ஸ்கூட்டராக நிலை நிறுத்தப் போவதாக பியாஜியோ கூறிவரும் நிலையில், ட்யூப்லெஸ் டயர்கள், டிஸ்க் பிரேக் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகள் வெஸ்பா ஸ்கூட்டரில் இல்லை. இது வாடிக்கையாளர் மத்தியில் சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 1, 2012, 8:23 [IST]
English summary
Piaggio has claimed Vespa scooter given 60Km mileage per liter petrol. The figure is awesome when compared with other scooters in Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+