வெஸ்பா இல்லாமல் புதிய பிராண்டில் பட்ஜெட் ஸ்கூட்டர்: பியாஜியோ
அடுத்த ஆண்டு வெஸ்பா பிராண்டை தவிர்த்து புதிய பிராண்டில் பட்ஜெட் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பியாஜியோ தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டருடன் மீண்டும் இந்திய மார்க்கெட்டில் நுழைந்தது பியாஜியோ. பிரிமியம் செக்மென்ட்டில் நிலை நிறுத்தப்பட்ட இந்த புதிய ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை 8,500 ஸ்கூட்டர்கள் புக்கிங் செய்யப்பட்டு டெலிவிரி கொடுக்கப்பட்டு வருவதாக பியாஜியோ தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வெஸ்பா ஸ்கூட்டர் விலை அதிகம் இருப்பதால் அஸ்தஸ்தை விரும்பும் வாடிக்கையாளர் மட்டுமே வாங்குகின்றனர்.
இதனால், விற்பனையில் முக்கிய இடத்தை பிடிக்கும் கணக்கு தவறுவதற்கு வாய்ப்பு இருப்பதை பியாஜியோ உணர்ந்துள்ளது. எனவே, வெஸ்பா பிராண்டை தவிர்த்து புதிய பிராண்டில் பட்ஜெட் விலை ஸ்கூட்டரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருப்பதாக பியாஜியோ தெரிவித்துள்ளது.
மேலும், டீலர் எண்ணிக்கையை விரிவுப்படுத்திய பின் இந்த பட்ஜெட் ஸ்கூட்டரை களமிறக்கவும் பியாஜியோ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பட்ஜெட் விலை கொண்ட ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்சஸ் உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








