தீபாவளிக்கு புதிய வெஸ்பா ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பியாஜியோ

வெஸ்பா ஃப்ளை
தீபாவளி பண்டிகையையொட்டி வெஸ்பா பிராண்டில் புதிய ஃப்ளை 125 சிசி ஸ்கூட்டரை பியாஜியோ அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் புதிய வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டரை பியாஜியோ நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. பிரிமியம் ரக ஸ்கூட்டராக நிலை நிறுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர் சென்னையில் 80,000 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மார்க்கெட்டில் முக்கிய இடம் பிடிக்கும் விதமாக பிற போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் புதிய 125 சிசி ஸ்கூட்டரை பியாஜியோ வரும் தீபாவளியையொட்டி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃப்ளை என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய வெஸ்பா ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்சஸெஸ் ஆகிய ஸ்கூட்டர்களுடன் போட்டி போடும். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இந்த புதிய ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த எஞ்சின் 10 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். முன்பக்கம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறம் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஹைட்ராலிக் சஸ்பென்ஷனையும் கொண்டிருக்கும். பின்புறம் டிரம் பொருத்தப்பட்டு வரும் இந்த ஸ்கூட்டரில் முன்பக்கம் விரும்பினால் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் கிடைக்கும்.

அடுத்த இரு மாதங்களில் மார்க்கெட்டுக்கு வர இருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் ரூ.50,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் மாதத்திற்கு 15,000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய அசெம்பிளிங் ஆலையை பியாஜியோ திறந்ததுள்ளதால் புதிய ஸ்கூட்டர் உற்பத்தியில் பிரச்னை இருக்காது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 30, 2012, 11:06 [IST]
English summary
Piaggio had re-entered scooter market in the country with the premium Vespa LX125 recently. The Vespa life style scooter has been highly priced and now, to draw sales volumes, the company is planning to launch another scooter - Fly 125cc soon Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+