வெஸ்பா ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மீண்டும் விற்பனைக்கு வந்தது

வெஸ்பா எல்எக்ஸ் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பியாஜியோ. ரூ.66,661 விலையில் வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டர் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் எல்எம்எல் நிறுவனத்துடன் இணைந்து ஏற்கனவே இந்தியாவில் வெஸ்பா ஸ்கூட்டரை விற்பனை செய்து வந்தது.

Vespa LX 125

ஆனால், எதிர்பார்த்த அளவு மார்க்கெட் இல்லாததால் ஸ்கூட்டர் விற்பனையை நிறுத்தியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் வெஸ்பா ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பியாஜியோ.

ஐரோப்பாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களில் வெஸ்பாவும் ஒன்று. இந்த நிலையில், இந்தியாவின் முதல் பிரிமியம் ஸ்கூட்டராக வெஸ்பா எல்எக்ஸ் 125 விற்பனைக்கு வந்துள்ளது.

பிற ஸ்கூட்டர்களை காட்டிலும் அதிக விலை கொண்டதாக இருப்பது குறித்து பியாஜியோ விளக்கமளித்துள்ளது. முதலில் பிராண்டுக்கு தனி மதிப்பு ஏற்படுத்தும் வகையில், இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், விற்பனை எண்ணிக்கை முக்கியம் இல்லை என்றும் பியாஜியோ கூறியுள்ளது.

மேலும், வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 124 சிசி எஞ்சின் இந்திய தட்பவெப்பம் மற்றும் சாலை நிலைகளுக்கு ஏற்றவாறு ட்யூனிங் செய்யப்பட்டுள்ளதாக பியாஜியோ கூறியுள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் அதிகபட்சம் 10.66 பிஎச்பி ஆற்றலையும், 9.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 26, 2012, 13:08 [IST]
English summary
Piaggio, the international scooter brand which has a special place in many enthusiasts is back with a bang in India. After the formal launch of Piaggio's operations in India during the 2012 Delhi Auto Expo, the two wheeler manufacturer has launched its premium lifestyle scooter Vespa 125 LX with a price tag of Rs.66,661 (ex showroom, Maharashtra).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+