வெஸ்பா ஸ்கூட்டருக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி: முழு விபரம்

Written By:
வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டருக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தை பியாஜியோ அறிவித்துள்ளது.

இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஆற்றல் வாய்ந்த ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களில் வெஸ்பா எல்எக்ஸ் 125 முன்னிலை வகிக்கிறது. ஸ்டைலான டிசைன், பவர்ஃபுல் எஞ்சின் என போட்டியாளர்களை காட்டிலும் பல கூடுதல் காரணங்களை வெஸ்பா பெற்றுள்ளது.

வெஸ்பா ஸ்கூட்டருக்கு தற்போது ஓர் ஆணடுக்கான வாரண்டி பியாஜியோவால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களையும் வெஸ்பா ஸ்கூட்டருக்கு பியாஜியோ அறிவித்துள்ளது.

ரூ.400 செலுத்தினால் ஓர் ஆண்டு அல்லது 12,000 கிமீ.,க்கான வாரண்டியையும், ரூ.550 கூடுதலாக செலுத்தினால் 2 ஆண்டுகள் அல்லது 24,000 கிமீ.,க்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.

ஏற்கனவே, வெஸ்பா ஸ்கூட்டர் வாங்கிய வாடிக்கையாளர்கள் ஓர் ஆண்டு வாரண்டிக்கு ரூ.480 ஐ செலுத்த வேண்டும். 2 ஆண்டு திட்டத்தை தேர்வு செய்து கொள்பவர்கள் ரூ.625 ஐ செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம், வாடிக்கையாளர்கள் கூடுதல் மதிப்பை பெற முடியும் என வெஸ்பா தெரிவித்துள்ளது.

English summary
The Vespa LX 125 is the most powerful 125cc scooter in India. It is also one of the most striking scooter in terms of design thanks to its vintage looks. Although the power and looks are interesting enough to attract buyers, the heft price tag of over INR 75,000 has prevented people from making a beeline at showrooms.
Story first published: Friday, December 28, 2012, 15:05 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos