மோட்டோ குஸ்ஸி குரூஸர் பைக்குகளை அறிமுகப்படுத்த பியோஜியோ திட்டம்

இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டில் முக்கிய பங்களிப்பை பெறும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது இத்தாலிய நிறுவனமான பியாஜியோ. மொத்தம் 7 இருசக்கர வாகன பிராண்டுகளை கைவசம் வைத்திருக்கும் அந்த நிறுவனம் இந்தியாவில் வெஸ்பா பிராண்டில் ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளது.
இதுதவிர, தனது அப்ரில்லா சூப்பர் பைக்குகளையும் சத்தமில்லாமல் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், மோட்டோ குஸ்ஸி பிராண்டு குரூஸர் பைக்குகளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, 4 முதல் 8 பிராண்டுகளை இந்திய மார்க்கெட்டில் நிலைநிறுத்துவதற்கு பியோஜியோ திட்டமிட்டுள்ளது. சரியான நேரத்தில் புதிய இருசக்கர வாகன மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று பியாஜியோவின் தலைவர் ரவி சோப்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








