வரும் 26ந் தேதி விற்பனைக்கு வருகிறது வெஸ்பா ஸ்கூட்டர்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் எல்எம்எல் கூட்டணியுடன் இந்தியாவில் வெஸ்பா ஸ்கூட்டரை பியாஜியோ விற்பனை செய்து வந்தது. ஆனால், மார்க்கெட் படுத்துக்கொண்டதால் ஸ்கூட்டர் விற்பனையை பியாஜியோ நிறுத்தியது.
இந்த நிலையில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மீண்டும் புரட்சியை ஏற்படுத்தியதையடுத்து, அனைத்து நிறுவனங்களும் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர முனைப்பு காட்டி வருகின்றன.
அந்த வகையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய டூ வீலர் தயாரிப்பு நிறுவனமான பியாஜியோ மீண்டும் தனது வெஸ்பா ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டரை காட்சிக்கு வைத்திருந்தது.
அந்த ஸ்கூட்டரை வரும் 26ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது பியாஜியோ. மேலும், வரும் மேமாதம் முதல் டெலிவிரி துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








