வெஸ்பா ஸ்கூட்டர் உற்பத்தியை இருமடங்கு உயர்த்தும் பியாஜியோ

பியாஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது வெஸ்பா ஸ்கூட்டரை மீண்டும் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விட்டுள்ளது. மேலும், பிரிமியம் ரகத்தில் வெஸ்பா ஸ்கூட்டரை நிலை நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வெஸ்பா ஸ்கூட்டரின் உற்பத்தி திறனை இருமடங்கு உயர்த்த பியாஜியோ முடிவு செய்துள்ளது. இதற்காக, வெஸ்பா ஸ்கூட்டருக்காக புதிய உற்பத்தி பிரிவில் கூடுதலாக முதலீடு செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வரும் 2013ம் ஆண்டில் ஆண்டுக்கு 3 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறனை பியாஜியோ பெற்றிருக்கும். இதன்மூலம், தங்கு தடையில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை டெலிவிரி கொடுக்க முடியும் என்று பியாஜியோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








