கர்நாடாகாவில் புதிய பல்சருக்கு புக்கிங் திறந்த பஜாஜ்: விரைவில் டெலிவிரி

மஹாராஷ்டிரா மற்றும் டெல்லியை தொடர்ந்து கர்நாடகாவில் புதிய பல்சருக்கு புக்கிங் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விரைவி்ல புதிய பல்சர் டெலிவிரி கொடுக்கப்படும் என்று டீலர் வட்டாரங்கள் தெரிவி்க்கின்றன.

200சிசி திறன் கொண்ட புதிய பல்சரை பஜாஜ் ஆட்டோ எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் சத்தமில்லாமல் விற்பனைக்கு விட்டு வருகிறது. மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் முதன்முறையாக புதிய பல்சர் விற்பனைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் புதிய பல்சர் விற்பனைக்கு வந்தது.

Pulsar 200 NS

இந்த நிலையில், தென்மாநிலங்களில் முதலாவதாக கர்நாடகத்தில் புதிய பல்சருக்கு புக்கிங் திறக்கப்பட்டுள்ளது. மேலும், புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் புதிய பல்சர் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளதாக பஜாஜ் ஆட்டோ டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அற்புதமான வடிவமைப்பு, அருமையான ட்ரிப்பிள் ஸ்பார்க் எஞ்சின், அராய் சான்றுபடி லிட்டருக்கு 58 கிமீ மைலேஜ் என அமர்க்களமான அம்சங்கள் கொண்டதாக புதிய பல்சர் வந்துள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது.

ரூ.85,863 விலையில் கர்நாடகத்தில் புதிய பல்சர் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 10, 2012, 12:47 [IST]
English summary
Bajaj has opened bookings for its much awaited new Pulsar 200 NS in the south Indian state of Karnataka at Rs 85,863 (ex-showroom price). Karnataka is the third state in the country where bookings for the Pulsar 200 NS have been made available after Maharashtra and NCR region.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+