செல்ப் எடுப்பதில் பிரச்னை: பல்சர் 220க்கு பஜாஜ் ரீகால்

இருசக்கர வாகன தயாரிப்பில் பஜாஜ் ஆட்டோ நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் பல்சர் வரிசை பைக்குகள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றன.
மேலும், அதிக நம்பிக்கையும், மதிப்பும் கொண்டதாக பல்சர் பைக்குகளை வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில், செல்ப் மோட்டாருக்கு மின்சப்ளை செய்யும் எலக்ட்ரிக்கல் யூனிட்டில் உள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செல்ப் எடுப்பதில் பல்சர் 220 பைக்குகளில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரச்னைக்குரிய எலக்ட்ரிக்கல் யூனிட்டை இலவசமாக மாற்றித் தரும் விதமாக பல்சர் 220 பைக்குகளை திரும்ப பெறுவதாக பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் மொபைல்போனுக்கு தகவல் அனுப்பபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எம்எஸ் வராவிட்டாலும், அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஆட்டோ டீலரிடம் சென்றால் இதுகுறித்து மேலும் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
பல்சர் 220 பைக்கில் கிக் ஸ்டார்ட்டர் கிடையாது. செல்ப் ஸ்டார்ட்டர் வசதி மட்டுமே கொண்டது. எனவே, தாமதிக்காமல் அருகிலுள்ள பஜாஜ் ஆட்டோ சர்வீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புதிய எலக்ட்ரிக்கல் யூனிட்டை மாற்றிக்கொள்வது நலம்.
இந்த எலக்ட்ரிக்கல் யூனிட்டை மாற்றுவதற்கு வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








