மோட்டார்சைக்கிள் தீயணைப்புப் பிரிவு சேவை: புனேயில் துவக்கம்

Motorcycle Fire Brigade
சந்து பொந்திலும் விரைவாக சென்று தீயை அணைக்கும் வகையில், புதிய மோட்டோர்சைக்கிள் தீயணைப்புப் சேவைப் பிரிவு புனேயி்ல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பொதுவாக தீயணைப்பு வாகனங்கள் தீப்பிடித்த இடத்திற்கு விரைவாக செல்வதில் பல்வேறு நடைமுறை பிரச்னைகள் இருக்கின்றன. குறிப்பாக, நகர்ப்புறங்கள் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல், குறுகலான சாலைகளில் செல்ல முடியாமல் திண்டாடுவதும், அதனால் ஏற்படும் இழப்புகளும் அதிகமாக இருக்கின்றன.

இந்த குறையை போக்கும் விதத்தில், புனே தீயணைப்பு துறையில் புதிய மோட்டார்சைக்கிள் தீயணைப்பு பிரிவு துவங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் பிரிவு தீப்பிடித்த இடத்திற்கு அதிவிரைவாக சென்று, சேவையை வழங்கும் என்று கருதப்படுகிறது.

இதற்காக, ரூ. 42 லட்சத்தில் அனைத்து தீயணைப்பு வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட 6 ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை புனே தீயணைப்பு துறை வாங்கியுள்ளது. 350 சிசி திறன் கொண்ட ராயல் என்பீல்டு எலக்ட்ரா மோட்டார்சைக்கிள்களின் பின்பக்கத்தில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 டேங்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இதில், தீயை அணைப்பதற்கான நுரை மற்றும் தண்ணீர் ஆகிய கலவை 9:1 என்ற விகிதத்தில் இருக்கும். தவிர, முதலுதவி சிகிச்சைக்கான மருந்துகள் பெட்டி, ஜெல் முலாம் பூசப்பட்ட போர்வைகள் ஆகிய அனைத்து வசதிகளும் இருக்கின்றன.

பழைய தீயணைப்பு வாகனங்களை விட இந்த வாகனங்கள் மூலம் கண்டிப்பாக தீப்பிடித்த இடத்திற்கு விரைவாக சென்று சேவை வழங்க முடியும். தவிர, இந்த தீயணைப்பு மோட்டார்சைக்கிள்களை விரைவில் பல மாநகரங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனமும் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 19, 2012, 10:44 [IST]
English summary
Pune fire Brigade has launched new motorcycle fire fighting service. The new motorcycle fire service is more faster than conventional type of fire fighting vehicles. The 6 Royal enfield motorcycles is euipped with fire fighting equipments.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+