பிலிப்பைன்ஸ் சந்தையில் புல்லட்டை களமிறக்கிய ராயல் என்பீல்டு

Classic battle green
பிலிப்பைன்ஸ் மார்க்கெட்டில் 5 மோட்டார்சைக்கிள் மாடல்களை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஐஷர் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்படும் ராயல் என்பீல்டு, மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் பழம்பெருமை வாய்ந்த நிறுவனமாக திகழ்கிறது.

உள்நாட்டு சந்தை தவிர சர்வதேச அளவில் 36 நாடுகளில் மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு அடியெடுத்து வைத்துள்ளது. 500 சிசி திறன் கொண்ட 5 மோட்டார்சைக்கிள் மாடல்களை ராயல் என்பீல்டு அங்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக, அந்நாட்டு தலைநகர் மணிலாவில் புதிய டீலரை ராயல் என்பீல்டு நியமித்துள்ளது. இந்த டீலர் வாயிலான 5 மோட்டார்சைக்கிள் மாடல்களும் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும், சர்வீஸ் வசதியையும் இந்த டீலர் வாயிலாக வழங்கப்படும் என்றும் ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

டெசர்ட் ஸ்ட்ரோம் 500, கிளாசிக் 500, கிளாசிக் 500 பேட்டல் கிரீன்,கிளாசிக் க்ரோம் 500 மற்றும் எலக்ட்ரா டீலக்ஸ் 500 மாடல்களை பிலிப்பைன்ஸ் மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு விற்பனை செய்ய உள்ளது.

இதில், பேட்டல் கிரீன் மாடலின் கலர் ராணுவ வாகனங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதால் இந்த மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, February 6, 2012, 14:46 [IST]
English summary
The Indian cult bike manufacturer which is slowly increasing its international reach has added yet another country to its list. The Eicher group company has now launched its products in the Asian archipelago of Philippines. Royal Enfield will be selling the Classic 500, Classic Chrome 500, Desert Storm, Electra Deluxe and the Classic 500 Battle Green in Philippines. The company’s first dealership is now open for business in the capital city of Manila.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+