ராயல் என்பீல்டின் கஃபே ரேஸர்.. பிரத்யேக படங்களுடன் தகவல்கள்!
கஃபே ரேஸ் மோட்டார்சைக்கிள்களை வடிவமைக்க தற்போது ரேஸ் பிரியர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். சாதாரண மோட்டார்சைக்கிள்களை மறுவடிவமைப்பு செய்து கஃபே ரேஸ் பைக்குகளாக அவற்றை மாற்றுகின்றனர். கஃபே ரேஸ் மோட்டார்சைக்கிள்களுக்கு பிரத்யேக கிட்டுகள் கிடைக்கின்றன. இவை விலை அதிகம் என்பதுடன் அதை கொண்டுவந்து புதிய கஃபே ரேஸ் பைக்காக மாற்றுவதில் அதிக நடைமுறை சிரமங்கள் உள்ளன.
இந்த நிலையில், ரேஸ் பிரியர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் புதிய கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்துகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே கஃபே ரேஸ் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு காட்சிக்கு வைத்திருந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது மிலன் ஆட்டோ ஷோவிலும் கஃபே ரேஸர் பைக் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு
இருக்கை வடிவமைப்பு, பெட்ரோல் டேங்க், ஹேண்டில்பார் ஆகியவை வசீகரிக்கிறது.

டிஸ்க் பிரேக்குகள்
முன் சக்கரம் மற்றும் பின் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

எஞ்சின்
இந்த பைக்கில் 535 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 30 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

சென்னையில் உற்பத்தி
சென்னை அருகே ஒரகடத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய ஆலையில்தான் இந்த புதிய மோட்டார்சைக்கிள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

எப்போது அறிமுகம்?
அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடலை ராயல் என்பீல்டு அறிமுகம் செய்கிறது.

வெயிட்டிங் பீரியட்
புதிய ஆலையில் உற்பத்திய துவங்கிய பின்புதான் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனவே, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் டெலிவிரி கிடைக்கும்.

விலை
கஃபே ரேஸருக்கான கிட் வாங்கி மாற்றுவதற்கு ஆகும் செலவை விட சிறிது குறைவான விலையில் இந்த மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.



Click it and Unblock the Notifications








