விரைவில் வருகிறது புதிய தன்டர்பேர்டு: மாற்றங்கள் என்ன?

சென்னையில் இறுதி கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வரும் இந்த புதிய தன்டர்பேர்டில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பல புதிய மாற்றங்களை ராயல் என்பீல்டு செய்துள்ளது.
புட் ரெஸ்ட்டுக்கு தகுந்தவாறு இருக்கையின் அமைப்பை மாற்றியுள்ளதோடு, ஸ்பிளிட் இருக்கைகளாகவும், திறந்துமூடும் வசதியையும் கொண்டிருக்கின்றன. பின் இருக்கையின் அடியில் பொருட்களை வைக்கும் இடவசதியும் இருக்கும்.
எளிதான கையாளுமைக்காக ஹேண்டில்பார் வடிவமைப்பு மாற்றம் கண்டுள்ளது. கண்ணாடிகளும் ஸ்டைலான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. பின்புறம் எல்இடி டேஞ்சர் லைட் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் கன்சோல் கொண்டிருக்கிறது.
புதிய தன்டர்பேர்டில் 55 வாட் திறன் கொண்ட 'லோ பீம்' புரொஜெக்டர் லைட்டும், 55 வாட் திறன் கொண்ட 'ஹை பீம்' வசதிகொண்ட ஹாலஜன் பல்பும் ஹெட்லைட்டில் பொருத்தப்பட்டிருக்கிறது. நீண்ட தூர ட்ரிப் செல்பவர்களுக்கு வசதியாக புதிய தன்டர்பேர்டு 20 லிட்டர் பெட்ரோல் டேங்குடன் வருகிறது.
இரண்டு சக்கரங்களிலும் பைப்ரி டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பை வழங்கும். 27.2 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 499 சிசி எஞ்சினுடன் வரும் தண்டர்பேர்டில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக் ரூ.2 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








