புதுப்பொலிவுடன் விரைவில் விற்பனைக்கு வரும் புதிய தண்டர்பேர்டு

Royal Enfield Thunderbird
வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் புதிய தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு விற்பனைக்கு கொண்டு வருகிறது.

நாட்டின் பழம்பெரும் மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் திகழ்கிறது.

இந்த நிலையில், மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக கூடுதல் அம்சங்களுடன் புதிய தன்டர்பேர்டை ராயல் என்பீல்டு விற்பனைக்கு கொண்டு வருகிறது.

கடந்த மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய தண்டர்பேர்டை ராயல் என்பீல்டு காட்சிக்கு வைத்திருந்தது. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த இந்த புதிய தன்டர்பேர்டு எப்போது விற்பனைக்கு வரும் என்ற ஆவலைத் தூண்டுவதாக இருந்தது.

இந்த நிலையில், வரும் மே அல்லது ஜூன் மாத்தில் புதிய தண்டர்பேர்டை விற்பனைக்கு கொண்டு வர ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தண்டர்பேர்டு கண்டுள்ள மாற்றங்கள்:

41 மிமீ முன்பக்க ஃபோர்க், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் ஆகிய புதிய அம்சங்களை தண்டர்பேர்டு கொண்டிருக்கும்.

இதேபோன்று, பின் இருக்கையை கழற்றும் வசதியுடன் ஸ்டெப் இருக்கைகள், பல்சர் 220 பைக்கில் உள்ளதுபோன்று புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்களுடன் புதிய தண்டர்பேர்டு வருகிறது.

இந்திய சாலை நிலைகளுக்கேற்ப கட்டுறுதியடன் தயாரிக்கப்படும் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்ற தண்டர்பேர்டின் புதிய மாடல் ரூ. 2 லட்சம் விலையில்விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 28, 2012, 15:07 [IST]
English summary
Royal Enfield is planning to increase it's bike range in Indian market. This time company is planning to launch new Thunderbird 500 for Indian customers. According to information, it may be possible in month of May-June 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+