டீசல் புல்லட்டை மீண்டும் தயாரிக்கும் திட்டம் இல்லை: ராயல் என்பீல்டு

கடந்த 1990ம் ஆண்டு இறுதியில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட புல்லட் மாடலை டாரஸ் என்ற பெயரில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. எலக்ட்ரிக் ஸ்டார்ட்டருடன், லிட்டருக்கு 80 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் வகையில் வந்த அந்த புல்லட் அப்போது மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னை காரணமாக கடந்த 1996ம் ஆண்டு டீசல் புல்லட் உற்பத்தியை ராயல் என்பீல்டு நிறுத்தியது. இந்த நிலையில், ஹார்லி டேவிட்சன், ட்ரையம்ப் என வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் அடுத்தடுத்த வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் வருகையால், ராயல் என்பீல்டு நிறுவனத்துக்கு சிறிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் வகையில் மீண்டும் டீசல் புல்லட்டை களமிறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. பெட்ரோல் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், டீசல் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு அறிமுகம் செய்தால் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த செய்திகளுக்கு தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மோட்டார்சைக்கிள்களுக்கு டீசல் எஞ்சின் தயாரிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு கையில் இல்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதனால், டீசல் புல்லட் கனவு தற்போது பகல் கனவாகிவிட்டது.


Click it and Unblock the Notifications








