சென்னையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச பயற்சி தரும் ராயல் என்பீல்டு

Royla Enfield Motorcycle
சென்னையிலுள்ள தனது பயிற்சி மையத்தில், வாடிக்கையாளர்களுக்கு இலவச மோட்டார்சைக்கிள் பழுது நீக்குவது மற்றும் பராமரிப்பு செய்வது குறித்த இலவச பயிற்சி முகாமை வரும் 25ந் தேதி துவங்க உள்ளதாக ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

நாட்டின் பழம் பெரும் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு, வாடிக்கையாளர் சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் சிறந்து விளங்குகிறது.

இந்த நிலையில், மோட்டார்சைக்கிளை பராமரிப்பது மற்றும் மோட்டார்சைக்கிளில் சிறு பிரச்னைகளை சரிசெய்வது குறித்த பயிற்சி முகாமை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தர இருக்கிறது ராயல் என்பீல்டு.

சென்னை, ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் உள்ள தனது பயற்சி மையத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை இந்த பயிற்சி முகாமை நடத்த உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் தமிழகம் மட்டுமின்றி எந்த ஒரு மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இந்த பயற்சி முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உங்களுக்கு அருகிலுள்ள ராயல் என்பீல்டு ஷோரூம்களிலும் இதுதொடர்பான விபரங்களை பெறலாம். மேலும், பயிற்சி மையத்தின் சூப்பர்வைசரை தொடர்பு கொண்டும் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சி தரப்படும் என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனம் வரும் 25ந் தேதி முதல் இந்த இலவச பயற்சி முகாமை துவங்க இருக்கிறது. பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இ-மெயில் மூலம் பதில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் மோட்டார்சைக்கிளில் ஏற்படும் சிறு ரிப்பேர்களை சரிசெய்வது மற்றும் பராமரிப்பு குறித்து சிறப்பாக பயிற்சி தரப்படுகிறது. இதன்மூலம், நடு வழியில் சிறு பழுதானால் கூட சொந்தமாக சரி செய்து கொள்ளும் ஆற்றலை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

மேலும், சில எளிய பராமரிப்பு மூலம் அதிக மைலேஜ் பெறுவதோடு மற்றும் அனாவசியமான பராமரிப்பு செலவீனங்களை தவிர்க்க முடியும் என்று ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 17, 2012, 16:23 [IST]
English summary
Royal Enfield will organise a day long training session in which people will be trained in how to handle any issues with their Bullet. This mini mechanic training will be held on 25th February. The training is free for Royal Enfield customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+