புதிய தன்டர்பேர்டு: படங்களுடன் சிறப்பு பார்வை
பைக் பிரியர்களின் நம்பிக்கையை பெற்ற குரூஸர் மோட்டார்சைக்கிள்களில் தன்டர்பேர்டு தனி இடம் உண்டு. இதை தக்க வைக்கும் வகையில் புதிய தலைமுறை அம்சங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிளை சமீபத்தில் ராயல் என்பீல்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
350சிசி மற்றும் 500 சிசி எஞ்சின் மாடல்களில் புதிய தன்டர்பேர்டு வந்துள்ளது. தற்போது மார்க்கெட் டிரென்டிற்கு தகுந்தாற்போல் புதிய வசதிகளுடன் வந்துள்ளன புதிய தன்டர்பேர்டு மாடல்கள். புதிய தன்டர்பேர்டில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்!!
இரட்டை டயல்கள் கொண்ட உள்ளன. இடது புற அனலாக் ஸ்பீடோமீட்டர் கன்சோலில் டிஜிட்டல் ட்ரிப் மீட்டர், எரிபொருள் அளவை காட்டும் டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளது. வலதுபுறத்தில் இருக்கும் எஞ்சின் ஆர்பிஎம் மீட்டர் கன்சோலில் பழுது எச்சரிக்கை இன்டிகேட்டர், ஹெட்லைட் ஹை பீம் இன்டிகேட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

வண்ணங்கள்
தன்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிள் 3 வண்ணங்களில் கிடைக்கும். ஸ்பிளிட் இருக்கைகள், புதிய ஹேண்டில்பார் உள்ளிட்டவை கூடுதல் அம்சங்கள்.

ஹெட்லைட்
புதிய தன்டர்பேர்டின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று பிரகாசமான வெளிச்சம் தரும் 'லோ பீம் புரொஜெக்டர் ஹெட்லைட்'. ஹை பீம் வசதிக்கு ஹாலஜன் பல்பு பொருத்தப்பட்டுள்ளது. அத்தோடு, புரொஜெக்டர் ஹெட்லைட்டை சுற்றிலும் எல்இடி லைட்டுகளுடன் கூடிய வளையம் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்டைலான ரியர் வியூ மிரர்களும் கூடுதல் கவர்ச்சி.

இருக்கை அமைப்பு
குரூஸர் பைக் என்பதால் நீண்ட தூரம் பயணித்தால் கூட அலுப்பில்லாமல் செல்லும் வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பின் இருக்கையின் கீழ் பொருட்களை வைப்பதற்கான இடவசதி உள்ளது. இரண்டு வீல்களும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மைலேஜ்
நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 35 கிமீ மைலேஜையும் புதிய தன்டர்பேர்டு கொடுக்கும் என்கிறது ராயல் என்பீல்டு.

பெட்ரோல் டேங்க்
20 லிட்டர் பெட்ரோல் நிரப்பும் வசதியை கொண்டிருக்கிறது. தவிர, ஒரு முறை டேங்க்கை முழுவதுமாக நிரப்பினால் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என்று ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

எஞ்சின்
500சிசி தன்டர்பேர்டில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 27.2 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. எலக்ட்ரிக் மற்றும் கிக் ஸ்டார்ட் வசதிகளை கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








