ஸ்கூட்டருக்கு ரூ.12 லட்சத்தில் பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி

பஞ்சாபில் வாகனங்களுக்கு பல லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கும் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. ராசி, கவுரவம் உள்ளிட்ட பல சமாச்சாரங்கள் இதில் அடங்கியிருக்கிறது. இதனால், அங்குள்ள பெரும்பாலான ஆர்டிஓ அலுவலங்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது.
இந்த நிலையில், அங்கு ரிக்கி பரார் என்ற விவசாயி ஒருவர் ரூ.45,000 மதிப்புடைய தனது ஸ்கூட்டருக்கு ரூ.12 லட்சம் கொடுத்து பேன்ஸி பதிவு எண்ணை ஏலத்தில் வாங்கியுள்ளார்.
பஞ்சாபிலுள்ள முக்த்சர் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த பேன்ஸி பதிவு எண்ணுக்கான ஏலத்தில்தான் தனது எல்எம்எல் வெஸ்பா ஸ்கூட்டருக்கு ரூ.12 லட்சம் கட்டணம் செலுத்தி பிபி30-ஜெ0003(PB30-J0003) என்ற பேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார்.
தனக்கு 3 மற்றும் 7 ஆகிய எண்கள் ராசியான எண்கள் என்பதால் இந்த எண்ணை வாங்கியதாக அவர் கூறினார். இத்தனைக்கும் அவரது எல்எம்எல் ஸ்கூட்டர் ரூ.45,000 மட்டுமே மதிப்புடையது.
ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த இந்த பேன்ஸி நம்பருக்கான ஏலத்தில் கடும் போட்டிக்கு மத்தியிலேயே அவர் இந்த பேன்ஸி எண்ணை பெற்றுள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் கார் உரிமையாளர் ஒருவர் இந்த நம்பருக்காக ரூ.10 லட்சம் வரை ஏலத்தில் எடுக்க முயற்சித்துள்ளார்.
ஆனால், இந்த நம்பரை எப்படியாவது பெற்ற தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் ரிக்கி பரார் ரூ.12 லட்சம் கொடுத்து இந்த பேன்ஸி நம்பரை வாங்கி தனது ஆசையை தீர்த்துக்கொண்டார்.


Click it and Unblock the Notifications








