பாலிவுட் 'பேச்லர்' சல்மானுக்கு கிடைத்த 'சூப்பர்' கிப்ட்!
பாலிவுட்டின் முன்னணி நாயகன் சல்மான்கானுக்கு சுஸுகி பைக்குகள் மீது எப்போதுமே காதல் உண்டு. கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் ரூ.13 லட்சத்தில் சுஸுகியின் இன்ட்ரூடர் பைக் வாங்கினார். மேலும், சுஸுகியின் புதிய ஹயாட்டே பட்ஜெட் பைக்கின் விளம்பர தூதராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஹயாட்டே விளம்பரத்தில் சல்மான்கான் தோன்றியதால் அந்த பைக்குக்கு வெகுவாக பிரபலம் கிடைத்துள்ளதாக சுஸுகி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் ரிலீசாக இருக்கும் தபாங்-2 படத்தில் சுஸுகி இன்ட்ரூடன் பைக்குடன் தோன்றியிருக்கிறார். தனது படத்தில் சுஸுகி தயாரிப்பை பிரபலபடுத்தியதால் நெகிழ்ந்து போன சுஸுகி இதற்கு நன்றி பாராட்டும் விதமாக உலகின் அதிவேக பைக்குகளில் ஒன்றாக புகழ்பெற்ற தனது ஹயபுசா சூப்பர் பைக்கை சல்மானுக்கு பரிசாக வழங்கியிருக்கிறது.

ஹயபுசாவுடன் சல்மான்
பரிசாக வழங்கப்பட்ட ஹயபுசாவுடன் சல்மான்கான்.

டாப் ஸ்பீட்
அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது இநத் ஹயபுசா.

பாலிவுட்டில் ஹயபுசா
சல்மான்கான் மட்டுமின்றி பாலிவுட்டை சேர்ந்த பல நடிகர்கள் சுஸுகி ஹயபுசா பைக்கை வைத்துள்ளனர். ஆடி பிராண்டு கார்களை போன்றே பல வீடுகளில் ஹயபுசா அலங்கரிக்கிறது.

எஞ்சின்
இந்த பைக்கில் 25 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1340 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
எல்சிடி திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. டிரைவ் மோடு செலக்ட்டார், பியூல் கேஜ், டிரிப் மீட்டர் என நான்கு பகுதிகளை கொண்டிருக்கிறது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்.

ஹெட்லைட்
70மிமீ புரொஜெக்டர் டைப் ஹெட்லைட் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஹெட்லைட் இரவு பயணங்களிலும் சிறப்பான பிரகாசத்தை தரும்.

உந்துசக்தி திறன்
0-100 கிமீ வேகத்தை 3.35 வினாடிகளிலும், 0-200 கிமீ வேகத்தை 8.39 வினாடிகளிலும் தொட்டுவிடும்.

மைலேஜ்
நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 17.7 கிமீ மைலைஜையும், நெடுஞ்சாலை பயணத்தில் லிட்டருக்கு 22.3 கிமீ மைலைஜையும் தரும் என்கிறது சுஸுகி.

விலை
ரூ.12.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சல்மானுக்கு கிடைத்த 'சூப்பர்' கிப்ட்!

சல்மானுக்கு கிடைத்த 'சூப்பர்' கிப்ட்!

சல்மான்கானின் சுஸுகி இன்ட்ரூடர்


சல்மான்கானின் சுஸுகி இன்ட்ரூடர்



Click it and Unblock the Notifications








