சுஸுகியின் புதிய குரூஸர் பைக் வாங்கிய சல்மான்கான்!
"எல்லோருக்கும் ராஜா போல வாழ வேண்டும் என்று கனவு இருக்கும். ஆனால், அந்த வாழ்க்கையை சல்மான்கான் வாழ்ந்து வருகிறார், ஓர் அரசனை போல" என்று சல்மான்கானை பற்றி நடிகர் பிரபுதேவா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது நூற்றுக்கு நூறு நிஜம் என்பதை அவ்வப்போது மெய்ப்பித்து வருகிறார் சல்மான்.
குறிப்பாக வாகனங்கள் மீது அதிகம் நாட்டம் கொண்டவர் சல்மான்கான். எத்தனையோ கார்களை வைத்திருந்தாலும், பைக்குகள் மீதுதான் அவருக்கு ஈர்ப்பு அதிகம். குறிப்பாக, சுஸுகி தயாரிப்புகள் மீது சல்மானுக்கு தீராத காதல் உண்டு. இதனால், என்னவோ, சுஸுகி ஹயாட்டே பைக்கின் விளம்பர தூதராகவும் இருக்கிறார். சல்மானிடம் ஏற்கனவே, சுஸுகி ஹயபுசா பைக் உள்ளது.
இந்த நிலையில், சுஸுகியின் இன்ட்ரூடர் 1800ஆர் பைக்கையும் சமீபத்தில் வாங்கியிருக்கிறார். தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த பைக்கின் புகைப்படத்தை அவரே வெளியிட்டிருக்கிறார். குரூஸர் ரகத்தை சேர்ந்த இந்த பைக் குறித்த அதிக தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு
குரூஸர் ரகத்தை சேர்ந்த இந்த பைக் வடிவமைப்பில் பல விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. ஒருவர் மட்டுமே தாராளமாக அமர்ந்து பயணம் செய்யும் இருக்கை கொண்டிருக்கிறது. உலக அளவில் விற்பனை செய்யப்படும் இந்த பைக் சுஸுகியின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்று. இந்த பைக் 348 கிலோ எடை கொண்டது. எல்

எஞ்சின்
இந்த குரூஸர் பைக்கில் 1783 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் 19.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது. முன்புறம், பின்புறம் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறது.

அம்சங்கள்
பெட்ரோல் டேங்கிலேயே ஸ்பீடோ மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிலேயே டிரிப் மீட்டர் மற்றும் எரிபொருள் அளவு காட்டும் மீட்டர்கள் இருக்கின்றன. இதுதவிர, கன்சோலில் ஆர்பிஎம் மீட்டர், இன்டிகேட்டர் விளக்குகள் ஆகியவை உள்ளன.

பெட்ரோல் டேங்க்:
குரூஸர் பைக் என்பதை பரைசாற்றும் ஸ்டைலான பெட்ரோல் டேங்க் அமர்ந்து செல்ல வசதியாக இருப்பதோடு, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சுஸுகி இன்ட்ரூடர் சின்னமும் பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த பெட்ரோல் டேங்க் 19.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

விலை விபரம்
டெல்லியில் இந்த பைக் ரூ.13.25 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சல்மானின் புதிய லவ்வர்...!!
தனது இன்ட்ரூடர் பைக்குடன் 'டெரர்' போஸ் கொடுக்கும் சல்மான்கான். அவரே ஃபேஸ்புக்கில்வெளியிட்ட படம்


Click it and Unblock the Notifications








