பைக்குகளுக்கு ஸ்டாப்/ஸ்டார்ட் தொழில்நுட்பம்: 10% எரிபொருள் சிக்கனத்துக்கு வழி

கார்களில் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் தொழில்நுட்பங்களில் ஸ்டாப்/ஸ்டார்ட் தொழில்நுட்பம் சிறந்து விளங்குகிறது. சிக்னல் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில வினாடிகளுக்கு மேல் கார் நிற்கும்போது தானாக எஞ்சின் அணைந்துவிடும். ஆக்சிலேட்டர் அல்லது பிரேக்கில் காலை லேசாக வைத்தால் எஞ்சின் ஸ்டார்ட் ஆகிவிடும். இதுவே ஸ்டாப் ஸ்டார்ட் தொழில்நுட்பம்.
இந்த புதிய தொழில்நுட்பம் கார்களின் எரிபொருள் சிக்கனத்துக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. இதே தொழில்நுட்பத்தை பைக்குகளுக்கும் உருவாக்கி வருகிறது எஸ்கேஎப் நிறுவனம். இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் பைக்குகள் 6 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.
பைக்குகளில் ஆக்சிலேட்டரை லேசாக அழுத்தினால் எஞ்சின் ஸ்டார்ட் ஆகும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. "ஸ்டாப்கோ" என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய தொழில்நுட்பத்தால் எரிபொருள் சி்ககனம் மட்டுமின்றி கார்பன் புகையால் ஏற்படும் மாசுபடுதலும் குறையும் எஸ்கேஎப் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








