புதிய ஹயாட்டே 110 சிசி பைக்கை அறிமுகப்படுத்திய சுஸுகி

நம் நாட்டில் சிறிய கார் மார்க்கெட் போன்று, 100 சிசிமுதல் 125 சிசி வரையிலான திறன் கொண்ட பைக்குகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. குறைந்த விலை, அதிக மைலேஜ் உள்ளிட்ட காரணங்களால் இந்த ரக பைக்குகள் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்த மார்க்கெட்டில் ஹீரோ, பஜாஜ் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய 110 சிசி ஹயாட்டே பைக்கை சுஸுகி இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
பார்ப்பதற்கு சுஸுகி ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஸ்லிங்ஷாட் பைக்கை போன்றே இருக்கிறது.112.8 சிசி திறன் கொண்ட ஏர்கூல்டு எஞ்சினுடன் வந்துள்ள ஹயாட்டேயில் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. 17 இஞ்ச் அலாய் வீல்களுடன் ஹயாட்டே கண்களை கவர்கிறது. செல்ப் ஸ்டார்ட் வசதியும் உள்ளது.
டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஹயாட்டேவின் ஷாக் அப்சார்பர், 5 முறை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகொண்டதாக இருக்கிறது. சாலை நிலை மற்றும் எடையை பொறுத்து ஷாக் அப்சார்பரை மாற்றிக்கொள்ளும் வசதிதான் இது. 8 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கிறது.
ரூ,40,162 முதல் ரூ.42,162 புனே எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய பைக் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று சுஸுகி தெரிவித்துள்ளது. வெள்ளை, கருப்பு, சிவப்பு, பச்சை மற்றும் சாம்பல் நிறங்களில் ஹயாட்டே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








